Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

3 மாதத்தில் அப்பாவாகி, தாத்தாவாகி, கொள்ளுத் தாத்தாவும் ஆன மனிதர்!

Posted by:
Published: Wednesday, July 25, 2012, 15:49 [IST]

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 60 வயது பேட்ரிக் சிலோன் என்பவர் 3 மாத இடைவெளியில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாக அவதாரமெடுத்திருக்கிறார்.

பேட்ரிக் சிலோன் கடந்த 2007-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் 2-வது திருமணம் செய்த மனைவிக்கு கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. 60 வயதில் தாம் தந்தையானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் பேட்ரிக்.

இந்த நிலையில் ஜூன் மாதத்தில் பேட்ரிக்கு மேலும் 2 மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருந்தன. அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகளின் மகளுக்கு குழந்தை பிறந்தது. அதாவது தந்தையான சந்தோஷத்தில் இருந்த பேட்ரிக் இப்பொழுது கொள்ளுத்தாத்தாவானார்!

அடுத்த 12 நாட்கள்தான்.... இன்னொரு மகள் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க தாத்தாவாகியிருக்கிறார் பேட்ரிக்! இப்பொழுது மொத்தம் பேட்ரிக்குக்கு 6 பேரக் குழந்தைகள்.

இருந்தாலும் 60 வயதில் பிறந்த ஈதன் என்ற குழந்தைதான் தமக்கு பொக்கிஷம் என்றும் ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் புன்னகையில் வாழ்க்கையையே மறந்துவிடுகிறேன் என்றும் லயிக்கிறார் பேட்ரிக்

English summary
Patrick Sloan, 60, who is due to retire in five years, thought his nappy-changing days were over. “It was a huge surprise to discover I was going to be a dad again at my age,” a major newspaper quoted him as saying. Hatke news, Man becomes dad, grandad and great-grandad in 3 months! “But to find out that I was gaining another grandchild and my first great-grandchild at a similar time was unbelievable.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs