டெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்யுமாறு இலங்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும் ஆயுதம் தாங்கிய இலங்கை கடற்படையினரை மிரட்டியதாகவும் கடந்த வாரம் கைது செய்தது. தமிழக மீனவர்களின் கைது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். ராமேஸ்வரம் மீனவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.










