Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்த ஆர்டிஓ அதிகாரி மீ்து இதுவரை நடவடிக்கை இல்லை-மக்கள் கொதிப்பு

Posted by:
Published: Thursday, July 26, 2012, 11:48 [IST]

 No Action On Rto Officials Who Cleared School

சென்னை: சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமான சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு ஓட்ட தகுதியானது என்று எப்சி அளித்த வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அரசின் செயல் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில்தான் சமீபத்தில் ஜியோன் பள்ளியின் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எப்சி வாங்கியுள்ளதாக தெரிகிறது. மொத்தம் நான்கு பள்ளிகளை இந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அத்தனை பேருந்துகளுக்கும், வேன்களுக்கும் சமீபத்தில்தான் எப்சி வாங்கியுள்ளனர்.

அப்படி வாங்கப்பட்ட பேருந்தில் இருந்த பெரிய ஓட்டை வழியாகத்தான் ஸ்ருதி கீழே விழுந்து உயிரை விட்டுள்ளாள். இப்படிப்பட்ட ஓட்டை பஸ்சுக்கு எப்படி ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்தார்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எப்சி போட்டுக் கொடுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் பாயவில்லை.

இது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன் போலீஸார் இந்த விவகாரத்தில் ஆர்டிஓ அலுவலகம் மீது பாராமுகமாக உள்ளனர் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இதுவரை பள்ளியின் பிற வாகனங்கள் தகுதியுடன் இருக்கிறதா என்பதை அவற்றை போலீஸார் பறிமுதல் செய்யாமல் இருக்கின்றனர். அத்தனை வாகனங்களும் பத்திரமாக பள்ளி வளாகங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதுவும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோன் பள்ளியின் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து அவை அனைத்தும் ஓட்டத் தகுதியான நிலையில்தான் உள்ளனவா, ஓட்டை உடைசல் உள்ளனவா என்பது குறித்து முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். அது முடியும் வரை அந்த வாகனங்களை இயக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அப்பாவி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

English summary
People are angered as no action has been taken on RTO officials who cleared FC for ZIon school bus, which claimed a girl's life yesteday near Tambaram.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.