For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி

Google Oneindia Tamil News

Shruthi
சென்னை: சென்னை ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமாக தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடல் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வீடு வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

சென்னை மக்களை பெரிய அளவில் உலுக்கி விட்டது ஸ்ருதியின் பரிதாபச் சாவு. சென்னையின் மிகப் பெரிய பள்ளிகளில் ஒன்று பெயர் வாங்கிய ஜியோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி, தனது பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து கொடூரமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கடும் கோபத்துடன் பஸ்சை தீவைத்து எரித்து விட்டனர். ஸ்ருதியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஊர்வலமாக ஸ்ருதியின் வீடு உள்ள வரதராஜபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு தரப்பையும் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தாம்பரத்திலிருந்து வரதராஜபுரம் வரை மெளன ஊர்வலம் நடத்தினர். இதையடுத்து முடிச்சூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் ஸ்ருதியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் பல்வேறு தரப்பையும் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தாம்பரத்திலிருந்து வரதராஜபுரம் வரை மெளன ஊர்வலம் நடத்தினர். இதையடுத்து முடிச்சூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டமாக இருப்பதால் போலீஸார் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Shops are shut in Tambaram, Mudichur and Chromepet after Zion school girl Shruthi's tragic death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X