Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மாற்று திறனாளிகள் ஒலிம்பிக்: 2 கால்களும் இல்லாத முதல் வீரர் ஆஸ்கர் பங்கேற்பு

Posted by:
Published: Friday, July 27, 2012, 8:09 [IST]

 First Double Amputee Athlete Olympics

ஜிமோனா: தென் ஆப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரு கால்களும் இல்லாமல் மாற்றுத் திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் வீரர் இவர் தான்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ். இவர் 11 மாத குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட நோயில் இரு கால்களையும் இழந்தார். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்று துடித்த ஆஸ்கர், செயற்கை கால்கள் (கால் போன்ற கம்பிகள்) பொருத்தி கொண்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டார்.

இதில் பல முறை அவரது கால்களில் ரத்தம் வந்தது உண்டு, பல முறை தவறி விழுந்துள்ளார். ஆனால் அவரது உற்சாகம் மட்டும் குறையவில்லை. தனது நீண்டகால பயிற்சியின் பயனாக, இந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் ஒலிம்பிக்கில் ஓட்டப்பந்தயத்தில் ஆஸ்கர் ஓட உள்ளார். மாற்றுத் திறனாளிகளின் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பவர்கள் 'பிளேடு ரன்னர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

இது குறித்து ஆஸ்கர் கூறியதாவது,

பயிற்சி முடித்து விட்டு அடுத்த நாள் காலையில் நான் தூங்கி எழுந்திருக்கும் போது, உடலில் பல இடங்களில் தசைப் பிடிப்புகள் இருக்கும். ஆனால் லட்சியத்தை அடைய பாடுபடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் மகிழ்ச்சி அடைந்தன் காரணம் என்ன என்பது லண்டன் ஒலிம்பிக் போட்டியின் முடிவுகளில் தெரியும். (ஒலிம்பிக் போட்டி) தேர்வு எழுத அனுமதி சீட்டு கிடைத்துவிட்டது. ஆனால் இனி தான் தேர்வு எழுத போகிறேன். ஒரு நபரின் திறமையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது.

எனது தன்னம்பிக்கை, திறமை, கடும் முயற்சி, தியாகம் ஆகியவற்றின் மூலம் நான் ஒரு விளையாட்டு வீரனாக உருவாகி உள்ளேன். இப்போது எனது வாழ்க்கை பாதையை திரும்பி பார்க்கும், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு போட்டிக்கு தகுதி பெறுவதிற்கும், தகுதி சுற்றிற்கான பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. நான் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் எனது சிறப்பான திறமையை காட்ட தான் ஓட போகிறேன்.

இதுவரை நான் செய்துள்ள தனிப்பட்ட சாதனை நேரத்தை காட்டிலும் சிறப்பாக ஓட முயற்சி செய்வேன். எனது நேரம், உடல்பலம், மனபலம் ஆகியவை சிறப்பாக உள்ளது. எனவே லண்டன் ஒலி்ம்பிக் போட்டியில் எனது ஓட்டம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

English summary
South African blade runner Oscur Pistorius, whose legs were amputated below the knee when he was a baby, is set to make history by running in Olympics. He will be the first double-amputee athlete to compete at the Olympics.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST