Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

வேலூர் அருகே பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி மாணவி பலி

Posted by:
Updated: Saturday, July 28, 2012, 10:10 [IST]

ஆம்பூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளிப் பேருந்தில் சென்றுவிட்டு திரும்பிய 3 வயது சிறுமி அதே பேருந்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் எம்பேசோ மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்த மாணவி சுஜிதா. பள்ளி முடிந்த உடன் இவர் தனது சகோதரியுடன் பள்ளி பேருந்தில் மாராபட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்தை விட்டு கீழே இறங்கும் போது, டிரைவர் பஸ்சை எடுத்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி சுஜிதா பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

மாணவி உயிரிழந்ததற்கு டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது. மாணவியின் மரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சேலையூர் மாணவி பேருந்தில் இருந்த ஓட்டையில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எல்.கே.ஜி மாணவியின் மரணம் ஆம்பூர் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published:  Friday, July 27, 2012, 19:09 [IST]
English summary
A 3 year old kindergarten student died in an freak accident near Ambur.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST