Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

முதுமலை சரணாலயத்தை எப்படி மூடலாம்?: கடையடைப்பு போராட்டம்

Posted by:
Published: Friday, July 27, 2012, 17:16 [IST]

நீலகிரி: முதுமலை புலிகள் சரணாலயம் மூடப்பட்டதை கண்டித்து அப்பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைக் காக்கும் வகையில் நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்களுக்கு சுற்றுலா செல்ல தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள புலிகள் சரணாலயங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று முதுமலை புலிகள் சரணாலயமும் மூடப்பட்டுள்ளது. திடீர் என்று சரணாலயம் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அப்பகுதியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி, மாயார் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.

English summary
Mudumalai tiger reserve is closed after supreme court ordered to keep the tourists away from the tiger reserves across the country.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST