
லண்டன்: ஒலிம்பிக் போட்டியின் முதலாவது தங்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ஃரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீனாவின் யீ சிலிங் தங்கம் வென்று பதக்க வேட்டையைத் தொடங்கியது.
துப்பாக்கிச் சுடுதலில் உலகின் முதல்நிலை வீராங்கனையான யீ சிலிங், 502.9 புள்ளிகளைப் பெற்றார்.
இதே பிரிவில் போலந்தின் சில்வியா போகாஸ்கா வெள்ளிப் பதக்கமும், சீனாவின் மற்றொரு வீராங்கனை யூ டான் வெண்கலமும் வென்றனர். ஒலிம்பிக் சாம்பியனான செக். குடியரசின் கேத்ரீனா இம்மோன்ஸுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.


















