Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லண்டன் ஒலிம்பிக்: துடுப்பு படகுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் ஸ்வரன்சிங்

Posted by:
Updated: Sunday, July 29, 2012, 16:59 [IST]

 Rower Swarn Wins Repechage Round Singles Sculls Quarter

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துடுப்பு படகுப் போட்டியில் இன்று நடைபெற்ற சுற்றில் வெற்றி பெற்ற இந்திய வீரர் ஸ்வரன் சிங் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் 'ஸ்கல்' பிரிவின் தகுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 35 வீரர்கள் கலந்து கொண்டனர். 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறும் வீரர்கள் கால் இறுதிக்கு தகுதி பெறுவார்கள். மற்ற வீரர்கள் இன்னொரு தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெற்றால் கால் இறுதிக்கு தகுதி பெறுவர்.

இந்திய வீரரான ஸ்வரன் சிங் முதல் பிரிவில் இடம் பெற்றிருந்தார். இப்பிரிவில் பெல்ஜியம், கியூபா, மெக்சிகோ, சிலி, ஈரான் நாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் பெல்ஜியம் வீரர் மியென்ஸ் முதலிடம் பெற்றார். இந்திய வீரர் 4வது இடத்தை பெற்றார். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இலக்கு நேரத்தை கடந்தால் காலிறுதிக்கு ஸ்வரன்சிங் தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

இன்றைய போட்டியில் தென்கொரிய வீரரை பின்னுக்குள் தள்ளி ஸ்வரன்சிங் வெற்றி பெற்றார். இதையடுத்து காலிறுதிக்கு ஸ்வரன்சிங் தகுதி பெற்றிருக்கிறார்.

Story first published:  Sunday, July 29, 2012, 15:27 [IST]
English summary
Indian rower Swarn Singh Virk held off a late challenge from his South Korean rival to win the single sculls repechage round and book a berth in the quarterfinals in the London Olympics here today.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs