Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சென்னை, வேலூர் அதிமுக பகுதி செயலாளர்கள் திடீர் மாற்றம்: ஜெயலலிதா உத்தரவு

Posted by:
Published: Sunday, July 29, 2012, 16:25 [IST]

சென்னை: சென்னை மற்றும் வேலூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர்களை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வடசென்னை தெற்கு மாவட்டம், துறைமுகம் பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் உள்ள கவுன்சிலர் ஆர்.அருள்வேல் (எ) ஆவின் அருள் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். வடசென்னை தெற்கு மாவட்டம் துறைமுகம் பகுதி கழக செயலாளர் பொறுப்பில் வீடியோ கே.சம்பத் (25வது வட்ட கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.

தென்சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் கவுன்சிலர் ஏ.என்.அலிகான்பஷீர் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அப்துல் கரீம் (எ) வி.கே.பாபு இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தென்சென்னை வடக்கு மாவட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி கழக செயலாளர் பொறுப்பில் அப்துல்கரீம் (எ) வி.கே.பாபு இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம், கழிஞ்சூர் பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.எஸ்.சுந்தர் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டம், கழிஞ்சூர் பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் எஸ்.பிரவின் (8வது தெரு, கோபாலபுரம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
ADMK chief cum Jayalalithaa has changed some of the party functionaries in Chennai and Vellore.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter