Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மாணவர்கள் தொடர் போராட்டம்: கோவை சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடல்

Posted by:
Published: Sunday, July 29, 2012, 11:22 [IST]

கோவை: மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவை சட்டக் கல்லூரி நேற்று முதல் காலவரையின்றி மூடப்பட்டது.

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், தனியார் சட்டக் கல்லூரிகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும், நுழைவுத் தேர்வு எழுதியவர்களை மட்டுமே விரிவுரையாளர்களாகத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 24ம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தை துவக்கினர். அன்று முதல் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து கோவை சட்டக் கல்லூரி நேற்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Coimbatore law college students have been protesting from july 24 seeking TN government's free laptop and bus pass. As a result, college is closed without announcing the reopening date.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter