
சென்னை: சென்னையில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து மாணவி ஸ்ருதியான சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பேருந்துகளின் பாதுகாப்பு விதிகளை உருவாக்க 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
போக்குவரத்துத் துறை இணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவில் நெல்லை போக்குவரத்துத் துறை துணை ஆணையர் பாலன், சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி, பூந்தமல்லி மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார், மாநில போக்குவரத்து ஆணையத்தின் உதவி செயலாளர்கள் லட்சுமி நாராயணன், லட்சுமிபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் பேருந்து, வேன் போன்ற வாகனங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்கும். இந்தப் புதிய விதிமுறைகள் ஒரு வாரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதையடுத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சட்டத் துறையுடன் ஆலோசித்து, அரசு இறுதி முடிவு எடுக்கும்.










