Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சீனாவில் ரெய்டுக்கு போன இடத்தில் பெண்களுடன் ஜல்சா: மாஜி அரசு அதிகாரிக்கு 17 ஆண்டு சிறை

Posted by:
Published: Sunday, July 29, 2012, 12:11 [IST]

பெய்ஜிங்: சீனாவில் லஞ்சம் வாங்கிய மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை துணை தலைவராக இருந்த ஜாங் ஜிங்லிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை துணை தலைவராக இருந்தவர் ஜாங் ஜிங்லி. அவர் தனக்கு கீழ் பணிபுரிபவர்களை கட்டாயப்படுத்தி தனது உயர் அதிகாரிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கிய 1,300 கடிதங்களை அனுப்ப வைத்துள்ளார். மேலும் கடந்த 2010ம் ஆண்டு பெய்ஜிங்கில் உள்ள ஹெவன் ஆன் எர்த் என்ற இரவு நேர கிளப்பில் சோதனை நடத்தச் சென்ற அவர் அங்குள்ள பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கின.
அவர் லஞ்சம் வாங்கியதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன.

இதையடுத்து போலீசார் அவர் மீது லஞ்ச வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டில் இருந்து இதுவரை 6 லட்சம் ஊழல் அரசு ஊழியர்கள் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை முன்னாள் தலைவர் ஜெங் ஜியாயு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கடந்த 2007ம் ஆண்டு தண்டிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Zhang Jingli , the former deputy chief of State Food and Drug Administration (SFDA) in China got 17 years imprisonment for taking bribes and living an indecent life.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs