Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

90 பவுன் கோவில் நகைகளைத் திருடிய அ.தி.மு.க. நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்

Posted by:
Updated: Thursday, August 2, 2012, 9:51 [IST]

சென்னை: பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 90 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் கைதான
தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி பொருளாளரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.கவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்டபாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி பொருளாளர் கே.துரைபாண்டியன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அ.தி.மு.கவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வைகுண்ட பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 90 பவுன் நகைகள் திருட்டுப் போன வழக்கில் துரைப்பாண்டியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்யதனர் என்பது குறிப்பிடதக்கது.

Story first published:  Wednesday, August 1, 2012, 10:05 [IST]
English summary
Virudunagar ADMK cadre Duraipandian has been removed from the party by chief Jayalalitha. She has asked cadres not to be in touch with him anymore
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Kolkata Knight Riders: 80 / 3, 13.4 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs