Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அளவுக்கு அதிகமான மின்சாரத்தை உறிஞ்சிய உ.பிக்கு ஒரு மாதத்தில் 402 முறை வார்னிங் கொடுக்கப்பட்டது

Posted by:
Published: Thursday, August 2, 2012, 14:11 [IST]

லக்னோ: வடக்கு மின்தொகுப்பில் இருந்து மிக அதிகளவு மின்சாரத்தை எடுக்கக் கூடாது என்று உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஒரு மாதத்தில் 402 முறை வார்னிங் நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாக வடக்கு மண்ட மின்தொகுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மின் தொகுப்பில் அதிர்வெண் 49.5ஹெட்ஸ்க்கு கீழே செல்லும்போதெல்லாம் மின்விநியோகம் கடுமையாகப் பாதிக்கும் நிலை உருவாகும். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தர்காண்ட், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கான மின் ஒதுக்கீட்டை விட கூடுதலாக மின்சாரத்தை உறிஞ்சும்போதெல்லாம் வடமின் தொகுப்பு சார்பில் கடந்த ஜூன் மாதம் முதல் ஜூலை மாத நடுப்பகுதி வரை பல நூறு முறை முன்னெச்சரிக்கை நோட்டீஸ் இந்த மாநிலங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் வட மின் தொகுப்பு மின்சாரத்தை அப்படியே கபளீகரம் செய்த உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் 402 முறை நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹரியானாவுக்கு 265 முறை, பஞ்சாப் 227, உத்தர்காண்ட் 154, ஜம்மு காஷ்மீர் 119, ராஜஸ்தான் 70, இமாச்சலப் பிரதேசம் 20 மற்றும் டெல்லிக்கு 5 முறை வார்னிங் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

குறிப்பாக ஜூலை 10 முதல் 16-ந் தேதி வரையில் உத்தரப்பிரதேச மாநிலம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை விட 31 முறை அளவுக்கு அதிகமாக மின்சாரத்தை உறிஞ்சித் தள்ளியிருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலம் 19 முறையும் ஹரியானா 17 முறையும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலம் 15 முறையும் டெல்லி 3 முறையும், ஜம்மு காஷ்மீர் 2 முறையும் இமாச்சலப் பிரதேசம் ஒருமுறையும் அளவுக்கு அதிகமாக போட்டி போட்டுக் கொண்டு மின்சாரத்தை உறிஞ்சி எடுத்திருக்கின்றன.

இதனால்தான் குறிப்பிட்ட அதிர்வெண்ணுக்கு கீழே மின்சாரம் போக பாதி மாநிலங்கள் இருளில் மூழ்கி தவியாய் தத்தளித்திருக்கின்றன.

English summary
Although UP Chief Minister Akhilesh Yadav has on Wednesday said it was not right to blame Uttar Pradesh for the recent grid failure, the Northern Regional Load Dispatch Centre (NRLDC) has claimed that it had warned the state several times about over-withdrawal of electricity. NRLDC said it issued around 402 caution messages to Uttar Pradesh between June and mid-July for over-withdrawal on occasions when frequency was below the safe limit of 49.5 hz.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs