Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஒலிம்பிக் டென்னிஸ்: ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி 'அவுட்'

Posted by:
Published: Thursday, August 2, 2012, 10:21 [IST]

 Game Over Paes Vardhan Of London Olympics

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், விஷ்ணுவர்தன் ஜோடி, பிரான்ஸின் ஜோ வில்பிரேட் சேங்கா, மைக்கேல் லோட்ரா ஜோடி எதிர்த்து விளையாடியது.

துவக்கம் முதலே இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் முதல் செட்டை 6-7 என்று பிரான்ஸ் ஜோடி கைப்பற்றியது. அதன்பிறகு 2வது செட்டில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் ஜோடி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3வது செட்டில் இந்திய ஜோடி 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது.

போட்டியின் முடிவில் பிரான்ஸ் ஜோடி 6-7, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியாவின் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.

முன்னதாக இந்தியாவின் மற்றொரு ஜோடியான மகேஷ் பூபதி, ரோகன் போப்பண்ணா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது. லியாண்டர் பயஸூக்கு கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா உடன் களமிறங்க உள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் அணியின் தேர்வின் போது, லியாண்டர் பயஸ் உடன் ஜோடி சேர மகேஷ் பூபதி மறுப்பு தெரிவித்தார். இதனால் லியாண்டர் பயஸ் உடன் விஷ்ணுவர்தன் ஜோடி சேர்க்கப்பட்டார். மேலும் மகேஷ் பூபதி உடன் ரோகன் போப்பண்ணா ஜோடி சேர்க்கப்பட்டார். தற்போது இரு அணிகளும் ஒலிம்பிக் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.

English summary
It's Game Over. Indian challenge in men's tennis doubles at the London Olympics 2012 ended on Wednesday as Leander Paes and Vishnu Vardhan too crashed out of the event.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 153 / 4, 49.4 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 23 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST