Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஒலிம்பிக் பாட்மிண்டன்: காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால்

Posted by:
Published: Thursday, August 2, 2012, 8:21 [IST]

 London Olympics Saina Nehwal Marches Into Quarters

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் 21-14, 21-16 என்ற செட்களில் நெதர்லாந்து வீராங்கனை ஜீ யாவோவை வீழ்த்தினார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய்னாவுக்கு இரண்டாவது செட் நெருக்கடியாக இருந்தது. ஆனாலும் உஷாராக ஆடிய சாய்னா இறுதியில் வெற்றிபெற்றார்.

இன்று நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் சாய்னா, டென்மார்க்கின் டின் பான் அல்லது ஜப்பானின் சயாகா சட்டோ ஆகிய இருவரில் ஒருவருடன் மோதுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் சாய்னா நேவால் காலிறுதியில் பங்கேற்பது 2-வது முறை.

English summary
On a day when the badminton world was shrouded with controversy, it was business as usual for India's Saina Nehwal as she cruised into the quarterfinals of the women's badminton singles at the London Olympics on Wednesday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST