Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கோட்டையில் கொடியேற்ற "மட்டும்" கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா சென்னை வருகிறார்?

Posted by:
Updated: Thursday, August 2, 2012, 15:29 [IST]

 Next Week Jaya Retrun From Kodanad

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு அனேகமாக மீண்டும் கொடநாடே திரும்பக் கூடும் என்றும் தகவல்கல் கூறுகின்றன.

கடந்த ஜூன் மாதம் 21- ந் தேதியன்று கொடநாடு சென்றார் முதல்வர் ஜெயலலிதா. அங்கிருந்தே ஒரு மாதத்துக்கும் மேலாக அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இடையில் கடந்த 18-ந் தேதி சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதா, மூத்த அமைச்சர் செங்கோட்டையனை நீக்கிவிட்டு 19-ந் தேதி புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கொடநாட்டில் இருந்து அடுத்த வாரம் முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அனேகமாக வரும் 6-ந் தேதி அல்லது 11- ந்தேதி ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பக் கூடும். பின்னர் ஆகஸ்ட் 15-ந் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றி வைத்துவிட்டு உடனே கொடநாட்டுக்கே அவர் திரும்பிச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

Story first published:  Thursday, August 2, 2012, 15:08 [IST]
English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa next week will return from Kadanad to be back in Chennai.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST