Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பெண் எஸ்.ஐ.யை ஆபாசமாகத் திட்டி கன்னத்தில் அறைந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது

Posted by:
Published: Friday, August 3, 2012, 16:07 [IST]

விருதுநகர்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த காவல் நிலைய கம்ப்யூட்டர் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அமுதா. அவரும் சப்-இன்ஸ்பெக்டர் தேவசங்கரியும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஆத்துக்கடை சந்திப்புப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அசோக் நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார். உடனே அவர்கள் அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அதே காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் செல்வம் (34) என்பவர் மாரியப்பனை விடுதலை செய்யக் கோரியுள்ளார். இதற்கு சப் -இன்ஸ்பெக்டர் அமுதா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வம் அமுதாவை ஆபாசமாகத் திட்டியதோடு, அவரது கன்னத்தில் அறைந்தார்.

இது குறித்து அமுதா கொடுத்த புகாரின்பேரில் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

English summary
Mariappan, computer operator in a police station in Virudhnagar was arrested for slapping SI Amudha of the same station.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter