தேனி: தேனியில் ரூம் போட்டு சீட்டு விளையாடிய போலீஸாரை மாவட்ட எஸ்.பி. பிரவீன் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேனி நேரு சிலை பின்புறம் ஒரு பிரபல லாட்ஜ் உள்ளது. பணியில் இருக்கும் போதும் சரி, பணி முடிந்தும் சரி, இந்த லாட்ஜுக்கு வரும் சில போலீசார் சீட்டு விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் பணம் வைத்தும் சீட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் காவலர் ஒருவரின் மனைவி தேனி எஸ்.பி. பிரவீன் குமாரிடம் தனது கணவரைப் பற்றி புகார் கூறினார். அவரது கணவர் சம்பளப் பணம் முழுவதையும் சீட்டாடிவிட்டு, வீட்டுக்கு வெறும் கையோடு வருகின்றார் என்று தெரிவி்ததுள்ளார். இதையடுத்து பிரவீன்குமாரின் உத்தரவின்பேரில் அல்லிநகரம் போலீசார் நேரு சிலை பின்புறம் உள்ள அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய போலீஸார் முருகேசன், குரங்கனி முருகேசன், கர்ணன், கண்ணன், துளசி ஆகியோரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் உடனே சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. பிரவீன்குமார் உத்திரவிட்டார்.










