
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனவே, விஜயகாந்த் மீதும் அவரது அறிக்கையை வெளியிட்ட ஆங்கில பத்திரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.










