Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

யு.எஸ். துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி: அஞ்சலி செலுத்த அரைக் கம்பத்தில் அமெரிக்க தேசியக் கொடி

Posted by:
Published: Tuesday, August 7, 2012, 17:42 [IST]

 Gurudwara Shooting Us Flags Fly At

நியூயார்க்: அமெரிக்காவின் விஸ்கோஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி வரும் 10-ந் தேதி அரைக் கம்பத்தில் பறக்கவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கோஸ் நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான, குருத்வாராவில் இனவெறியோடு நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த சீக்கியர்களுக்காக மட்டுமின்றி, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உயிர் நீத்த காவல்துறையினருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் ப்றக்கவிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

English summary
To honour victims of the shooting inside a gurudwara in Wisconsin, United States President Barack Obama [ Images ] has ordered that the American flags be flown at half-staff at all the US government buildings and its diplomatic missions overseas till August 10.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 170 / 4, 54.3 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Play stopped for rain.