Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

Posted by:
Published: Wednesday, August 8, 2012, 17:07 [IST]

குமரி: நித்திரவிளை அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் செக்ஸ் தொல்லையால் இறந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அமீன். அவரது மனைவி பாத்திமா பீவி. கடந்த 4ம் தேதி அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பலன் அளிக்காமல் பாத்திமா பீவி கடந்த 5ம் தேதி உயிர் இழந்தார்.

திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடந்தது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாத்திமா பீவியின் மரணத்திற்கு காரணம் அவரது கணவரின சகோதரியின் கணவர் சேக் முகமது என்பது தெரிய வந்தது. சேக் முகமது பாத்திமா பீவிக்கு அண்ணன் முறை ஆவார். எனினும் முறை தவறி பாத்திமா பீவிக்கு செக்ஸ் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இது பற்றி கேரள மாநிலம் பூவாரில் உள்ள

தனது தாயிடம் கூறி அவர் அழுதுள்ளார். தொடர்ந்து சேக் முகமது குறித்து அவரது மனைவி, மாமியார் தனது கணவரிடமும் கூறியுள்ளார். எனினும் அவர்கள் சேக் முகமதுவை கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பாத்திமா தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சேக் முகமது, பாத்திமாவின் கணவர் அமீன், மாமியார் ஆரிபா, கணவரின் சகோதரிகள் சுல்தானி, பாத்திமா பீவி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சேக் முகமது, அமீன் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நித்திரவிளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A young woman immolated herself on august 4th in Kanyakumari. She succumbed to injuries on the very next day. Police found out that her sister-in-law's husband's torture as the reason for her end.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 5 / 2, 3 Overs