Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பிரிட்டன் விசாவுக்கு இனி டி.பி. நோய் பரிசோதனை அவசியம்: 16ம் தேதி முதல் அமல்

Posted by:
Published: Thursday, August 9, 2012, 13:59 [IST]

டெல்லி : பிரிட்டன் செல்வதற்காக விசா விண்ணப்பிக்கும் இந்திய குடிமக்கள் தங்களுக்கு காசநோய் இல்லை என்ற சான்றிதழை இணைக்கவேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் காசநோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசடைந்த சுற்றுச்சூழலினால் காற்றின் மூலம் பரவும் நோய்கள் அதிகம். அதில் 15 முதல் 49 வயதிற்குட்பட்டோரில் 6 ல் ஒருவர் காசநோயினால் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் காசநோய் பலி ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா உட்பட 67 நாடுகளில் இருந்து பிரிட்டன் வரும் மக்கள் விசா பெற விண்ணப்பிக்கும் போது காசநோய் பற்றிய சான்றிதழை இணைக்கவேண்டும் என்று பிரிட்டன் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் 6 மாதங்களுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக விசா கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காசநோய் சான்றிதழை கட்டாயம் இணைக்கவேண்டும். அதேசமயம், பிரிட்டனில் பணி புரிவதற்காக விசா விண்ணப்பம் பெறுவோர் செப்டம்பர் 10ம் தேதி முதல் காசநோய் சான்றிதழை இணைக்கலாம். அதேபோல் மேல்படிப்பிற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் நவம்பர் 1 ம்தேதிக்கு மேல் இந்த சான்றிதழை அளித்தால் போதுமானது என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

English summary
The British government on Wednesday, however, made it clear that pre-entry TB screening is only required by individuals who are traveling to the UK for more than six months.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter