Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஒலிம்பிக் பதக்கங்களை நாய்களுக்கு போட்டு அழகு பார்த்த டென்னிஸ் வீரர் ஆன்டி முரேயின் காதலி

Posted by:
Published: Thursday, August 9, 2012, 15:25 [IST]

 Andy Murray S Precious Olympic Medals Rest With His Dog

பெங்களுர்: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முரே பெற்ற ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வீட்டு நாய்களுக்கு போட்டு அழகு பார்த்துள்ளார் அவரது காதலி.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டு உலகில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் செயல்பட்டு வருகின்றனர். அதற்காக பலர் தங்களின் வாழ்க்கையே தாகம் செய்து, பயிற்சி மேற்கொண்டு பதக்கம் பெறுகின்றனர். இதில் சிலருக்கு ஏமாற்றமும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முரே, ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை, அவரது வீட்டு நாய்க்குட்டிகள் அணிந்த படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவரது காதலி டுவிட்டர் இணையதளத்திலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஆன்டி முரேயின் காதலி கிம் ஷியர்ஸ் டுவிட்டர் இணையதளத்தில், ரஸ்டி(நாய் குட்டி) வெள்ளிப்பதக்கம் பொறுத்தமாக உள்ளதா என்று போட்டி பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஆன்டி முரேயின் வீட்டு நாய்க்குட்டிகளுக்கு, அவரது ஒலிம்பிக் பதக்கங்களை அணிவித்த போட்டோவும் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட உலகின் பல முன்னணி விளையாட்டு வீரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் கிடைக்கும் பதக்கத்திற்கு இவ்வளவு தான் மதிப்பா என்று பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தோல்வியை தழுவிய ஆன்டி முரே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதித்தார். ஆனால் அவரது பதக்கங்கள் வீட்டு நாய்களுக்கு போட்டு அழகு பார்த்தது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

English summary
When millions of sports persons await the moment after finishing at the top of the podium, here is an interesting yet shameful story on what a gold medallist Andy Murray did after winning Olympic Gold in Tennis. While everyone are aware of the hardwork that goes into winning an Olympic Gold, here is a story on Andy Murray who gave his Olympic medals to his dogs.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab: 183 / 7, 19.5 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 12 / 0, 2 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST