Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ரியோ நகரில் 2016ம் ஆண்டு சம்பா நடனத்துடன் அடுத்த ஒலிம்பிக் போட்டி துவங்கும்

Posted by:
Published: Monday, August 13, 2012, 13:02 [IST]

 Olympics 2016 Will Held Rio Starts With Samba Show

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கோலகல நிறைவு விழாவில், வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ரியோ ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா பிரேசில் நாட்டின் பிரபல சம்பா நடனத்துடன் துவங்க உள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்றது. இதில் கோலகலமான இசை, நடனம், வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு விழாவின் இறுதியில் அடுத்த ஒலிம்பிக் போட்டி, பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியின் தாயகமான கிரேக்க நாட்டின் கொடியும், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இங்கிலாந்து நாட்டின் கொடியும், வரும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள பிரேசில் நாட்டின் கொடியும் ஏற்றப்பட்டது. மேலும் 3 நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில், 2016ம் ஆண்டு ரியோ நகருக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை அளிக்கும் வகையில், பிரேசில் நடன குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் பிலி, லண்டன் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் சம்பா நடன குழுவினருடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். ஆனால் பிரேசில் பராம்பரிய வழக்கில், நடன குழுவினர் ஆடைகளை கலைந்து ஆடுவார்களா என்ற பயன் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இருந்தது. இதனால் ஆபாச நடனங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பிரேசில் நாட்டு பாப் பாடி மரிசா மோன்டி, பிரபல மாடல் அழகி அலீசாந்த்ரா அம்ப்ரோசோ ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் ரியோ நகரை சேர்ந்த நபராக சித்தரிக்கப்பட்ட 'சிரியோகா' என்று பெயரிடப்பட்ட நபர், உலக மக்களை அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை குறிக்கும் வகையில், பிரேசில் பராம்பரியப்படி, கட்டியணைத்து வரவேற்றார்.

அதன்பிறகு தென் அமெரிக்க இசையுடன் கூடிய பாரம்பரிய பாப் பாடலை பிரேசில் நாட்டவரான ராப்பர் பினிங்கோ பாடினார். பிரபல நடிகர் மற்றும் பாடகரான ஷியு ஜோர்ஜ் மேடையில் தோன்றி, பிரேசில் நாட்டு வாயு உடற்பயிற்சிகள் மற்றும் சண்டை பயிற்சி நிகழ்ச்சியை செய்து காட்டினார்.

வரும் 2016ம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில், பிரேசில் நகரின் விதிகளில் ஆடப்படும சம்பா நடனம் இடம் பெற உள்ளது.
பிரேசில் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக பிரபலம் மிகுந்த விதிஉலா திருவிழாவில் கலந்து கொள்ளும் நடன கலைஞர்கள், அப்படியே துவக்க விழாவிற்கு சென்று கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக உலக அளவில் பிரபலமான பிரேசில் இசையை குறிக்கும் 10 மில்லியன் ஆல்பங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் நாட்டில் தான் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Brazilian carnival dancers invaded the stage in the final section of the closing ceremony last night to symbolise the handover from London 2012 to Rio 2016.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs