Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கலைஞர்கருணாநிதி.காம்-தொடங்கி வைத்தார் கருணாநிதி

Posted by:
Updated: Friday, August 17, 2012, 15:20 [IST]

 Karunanidhi Launches His Website

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது முதுபெரும் வயதில் இணையதளத்திற்குள் முறைப்படி காலெடி எடுத்து வைத்துள்ளார். கலைஞர்கருணாநிதி. காம் என்ற பெயரிலான அவரது புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சமீபத்தில்தான் கருணாநிதி டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றுக்குள் புகுந்தார். இப்போது இணையதள வீட்டுக்குள்ளும் புதுமுனை புகுவிழா நடத்தி அடியெடுத்து வைத்துள்ளார்.

http://www.kalaignarkarunanidhi.com என்ற பெயரிலான இந்த புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கருணாநிதியை அதைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இனி இந்த இணையதளத்திலும், திமுக நிகழ்ச்சிகளை அனைவரும் அறிந்து கொள்ளலாம். டுவிட்டர், பேஸ்புக்கில் சேர்ந்ததன் மூலம் இளைய தலைமுறையினருடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் தனக்கே உரிய மந்தகாச புன்னகையுடன்.

இந்த இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் முறையாக அப்டேட் செய்யப்படவில்லை. அதுதொடர்பான பணிகள் நடந்து வருவதாக அதில் செய்தி போடப்பட்டுள்ளது.

கருணாநிதி டிவிட்டர் பக்கம்

கருணாநிதியின் பேஸ்புக் பக்கம்

Story first published:  Friday, August 17, 2012, 15:14 [IST]
English summary
DMK president Karunanidhi has launched his website today.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST