டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் உள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா 3 நாட்கள் தமிழகம் வந்து செல்ல டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். 15 மாத சிறைவாசத்துக்கு பின் ராசாவை கடந்த மே மாதம் 15ம் தேதி நிபந்தனை ஜாமீனில் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.
அவர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழகம் செல்லக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந நிலையில் 3 நாட்கள் தமிழகம் சென்றுவர அனுமதி கோரி சிபிஐ தனி நீதிமன்றத்தில் ராசா மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து ராசா நேற்று மாலை முதல் திங்கள்கிழமை இரவு வரை 3 நாட்கள் தமிழகம் சென்றுவர நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்தார்.










