Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வழக்குப்பதிவு

Posted by:
Published: Saturday, August 18, 2012, 13:13 [IST]

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட 18 பேர் மீது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமையன்று குற்றச்சாட்டுப்பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் சாட்சி விசாரணை 31-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

1991 ம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக 17.6.1991 முதல் 13.5.1996 வரை பதவி வகித்தவர் ராஜ கண்ணப்பன். இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்தது. ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை தன் பெயரிலும், தனது மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996-ம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை உள்ளிட்ட 20 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை 2005-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகை நகல் 2007-ம் ஆண்டு கண்ணப்பன் உள்பட 20 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நளாயினி, ராஜலட்சுமி ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து இவர்கள் 2 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்ட கண்ணப்பன் உள்பட 18 பேர் கோர்ட்டில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகையில் போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, கண்ணப்பன் உள்பட 18 பேரிடம் நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு 18 பேரும், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக கூறினர்.

இதையடுத்து இந்த வழக்கை 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆர்.செல்வகுமார் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் மொத்தம் 388 பேர் உள்ளனர். இதில் முதல் சாட்சி 31-ந் தேதியன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவிற்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கினை போல இந்த வழக்கும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A Special Court on Friday framed charges against former Minister Raja Kannappan and his family members in a wealth case. Eighteen accused appeared before the Special Court on Friday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter