Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சென்னை சென்ட்ரலில் விடியக் காத்திருந்து சொந்த ஊருக்குப் போன பல்லாயிரம் வடகிழக்கு மாநிலத்தவர்

Posted by:
Published: Saturday, August 18, 2012, 13:08 [IST]

சென்னை: தாக்குதல் பயம் காரணமாக சென்னை சென்ட்ரலில் விடிய விடியக் காத்திருந்து சொந்த ஊருக்கு வடகிழக்கு மாநிலத்தவர் திரும்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையைவிட்டு வடகிழக்கு மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.

தாக்குதல் அச்சத்தால் கர்நாடகம், ஆந்திராவைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர். பெங்களூரில் இருந்து 19 பெட்டிகளுடன் புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று அதிகாலை 3.30 மனிக்கு சென்ன சென்ட்ரலை வந்தடைந்தது. அதில் மேலும் 2 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டும் கூட்டம் அலைமோத அசாம் நோக்கி சென்றது.

பின்னர் காலை 6.35 மணிக்கு வந்த ரயிலிலும் 19 பெட்டிகள் இணைக்கப்பட்டு அதில் 700 பேர் ஏறிச் சென்றனர். காலை 8.20 மணி, மாலை 4.30 ஆகிய சிறப்பு ரயில்களும் கூட்டம் அலைமோதியது. பின்னர் இரவும் சென்ட்ரல் ரயில் நிலையம் வடகிழக்கு மாநிலத்தவராலேயே நிரம்பி வழிந்தது. இன்று காலை வரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலான வடகிழக்கு மாநிலத்தவர் சென்னையிலிருந்து வெளியேறினர்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவருக்கு எந்த பிரச்சனை இல்லை என்றாலும் தங்களது உறவினர்கள் கொடுக்கும் நெருக்கடியால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது என்பது ஊர் திரும்பியோரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

இதேபோல் பெங்களூர், புனே ஆகிய நகரங்களிலும் சனிக்கிழமை இன்றும் வடகிழக்கு மாநிலத்தவர் வெளியேறுவது தொடர் கதையாகி வருகிறது.

English summary
Despite the Government’s efforts to pacify the situation that has put the people of North East in a tizzy, an air of uncertainty hangs heavy in cities like Bangalore, Hyderabad, Pune and Chennai. Gripped by rumour fuelled fears of impending attacks on them, people from North East continued to flee southern cities Bangalore, Pune and Chennai for the third consecutive day on Saturday with hundreds thronging the railway stations and heading back home.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs