Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அசாமிற்கு இலவச பயணம்- வதந்தியால் குமரி ரயில் நிலையத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு

Posted by:
Published: Saturday, August 18, 2012, 18:06 [IST]

குமரி: கன்னியாகுமரியில் இருந்து அசாம் செல்ல இலவசமாக ரயில் இயக்கப்படுவதாக இன்று காலையில் வதந்தி பரவியதால், ஆயிரக்கணக்கான அசாம் மாநில மக்கள் குமரி ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த இரு வாரங்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வசிக்கும் அசாம் மக்கள் தாக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் அசாம் மக்கள், சொந்த மாநிலத்திற்கு சென்று வருகின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் வசித்து வந்த அசாம் மாநில மக்கள், கடந்த 2 நாட்களாக ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

கன்னியாகுமரியில் இன்று மதியம் 2.45 மணி அளவில் கிளம்பும் கவுகாத்தி ரயிலில் அசாம் மாநிலத்தவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று வதந்தி பரவியது. இதனால் சுமார் 400 அசாம் மாநில தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினர். நேரம் செல்ல செல்ல வடகிழக்கு மாநில பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

அசாம் மாநிலத்திற்கு இலவச ரயில் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் அறிவித்த பிறகும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அசாம் மக்கள் ரயில் நிலையத்திலேயே நின்றனர். இதனால் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகளவில் பயணிகள் ஏறி சென்றனர். இதில் பெரும்பாலானோர் தாக்குதல் பீதியில், கொல்கத்தா சென்று வேறு ரயில் மூலம் அசாம் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற பீதியை பரப்பியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
More than 1,000 Assami people gathered in the Kanyakumari railway station after, a free travel rumor spead in Kanyakumari.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter