For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'நித்தியானந்தாவை வரவேற்பது மரபல்ல... கட்டுண்டோம்... பொறுத்திருப்போம்!' - மதுரை ஆதீனம் பூடக பேட்டி

By Shankar
Google Oneindia Tamil News

Madurai Aadheenam and Nithayanantha
மதுரை: இளைய ஆதீனமான நித்யானந்தாவை வரவேற்க வேண்டிய அவசியமில்லை. அது ஆதீன மரபும் கிடையாது. கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பாக நித்யானந்தா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்கு புறப்பட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்கள் டெல்லியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைலாய யாத்திரையை முடித்துவிட்டு நித்யானந்தா, தனது சீடர்களுடன் நேற்று காலை மதுரை திரும்பினார். ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தாவை மதுரை ஆதீனம் வரவேற்க வரவில்லை.

இது நித்யானந்தா சீடர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று இரவு நித்யானந்தா தனது சீடர்களுடன் புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறுகையில், "நித்யானந்தா இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளார். ஆதீனத்தின் ஐதீகப்படி மூத்த ஆதீனம், இளைய ஆதீனத்தை வழியனுப்பவோ, வரவேற்கவோ கூடாது.

இதுதவிர இளைய ஆதீனம் வெளியிடங்களுக்கு செல்லும்போது மூத்த ஆதீனத்தை நேரில் பார்த்து ஆசி பெறவேண்டும். இதுதான் மரபு. இளைய ஆதீனத்தை வாசலுக்கு சென்று வரவேற்பது மூத்த ஆதீனத்தின் மரபு அல்ல.

எனவே நித்யானந்தாவை வரவேற்கச் செல்லவில்லை. அது மரபும் இல்லை. கைலாய யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய நித்யானந்தா என்னிடம் ஆசி பெற்றுவிட்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றார். இன்னும் 6 மாதங்களுக்கு திருவண்ணாமலை, டெல்லி, கொடைக்கானல் மற்றும் பல்வேறு இடங்களுக்கு நித்யானந்தா செல்ல திட்டமிட்டார்.

'கற்றுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்வரை' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நாமும் பொறுத்திருப்போம்," என்றார்.

ஆனால் சமீபத்தில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நித்யானந்தா, ஜாமீனில் வந்த போது, அவரை ஓடிவந்த வரவேற்றார் அருணகிரிநாதர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
It seems that Madurai Adheenam is miffed with his Ilaya Adheenam Nithyananda. When Nithy returned from Himalaya, the senior Adheenam wasn't received him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X