Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சுதந்திர தினத்தன்று பாக். கொடியேற்றினார்களாம்... வதந்தி இமெயிலால் பரபரப்பு!

Posted by:
Published: Monday, August 20, 2012, 16:39 [IST]

ஹைதராபாத்: பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆந்திராவில் அந்நாட்டு கொடியேற்றி கொண்டாடுவது போன்ற படத்துடன் கூடிய வதந்தி இமெயில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தினமாகும். இந்த நிலையில் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சிலர் கடந்த 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, அந்நாட்டு கொடியை ஏற்றி கொண்டாடியதாக வதந்தி இ-மெயில் பரவியது.

இணையதளத்தின் மூலம் பரவிய இந்த வதந்தி செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேஸ்புக், கூகுல், டுவிட்டர் என்று இன்டர்நெட்டில் இந்த செய்தி வேகமாக பரவியது. இந்த செய்தியில் சிலர் குழுவாக நின்று பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது போன்ற படம் வெளியாகி இருந்தது.

அதன் அருகில் வெளியான செய்தியில், ஆந்திராவை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் உள்ள முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானின் 65வது சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இது போன்ற ஒரு வெட்கக்கேடான சம்பவத்திற்கு, உலகில் வேறெந்த நாட்டிலும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. வேறெந்த நாடும் சுதந்திர தினத்தை இப்படி கேவலப்படுத்தியது இல்லை.

பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்படும் காங்கிரஸ் கோழைகளால் இந்தியா ஆட்சி செய்யப்படுகிறது என்பதற்கு இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்? ஆந்திரா மாநில முதல்வர் என்.கிரண் குமார் ரெட்டி, இதற்கு சிறந்த மாதிரியை காட்டியுள்ளார். இந்தியாவிற்கு நல்லது நடக்க வேண்டும் விரும்பும் நபர் நீங்கள் என்றால், இந்த செய்தியை பரப்புங்கள் என்று அந்த இ மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இ-மெயில் கிடைத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர், இதை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இந்த இ-மெயில் குறித்து விசாரித்த போது, பாகிஸ்தான் நாட்டின் சிந்து பகுதியில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போட்டோவை, ஹைதராபாத்தில் கொண்டாடியது போல உருமாற்றி இன்டர்நெட்டில் வெளியிட்டது தெரியவந்தது.

மேலும் ஹைதராபாத்தில் இது போன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை என்பது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த சிலர் தவறான தகவல்களை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து இன்டர்நெட்டில் இது குறித்து செய்தி வெளியிட்ட 80க்கும் மேற்பட்ட இணையதளங்களில் இருந்து அந்த செய்தி நீக்கப்பட்டது. சமுதாய இணையதளங்களில் மேற்கொண்டு இந்த செய்தி பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

English summary
A e-mail photo showing Pakistanis celebrating Pakistan Independence Day in Hyderabad with their national flag. The fake email passed very fastly as Muslims in Hyderabad, waving the Pakistani flag.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter