For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்: கட்டுப்பாட்டை இழந்த லிப்ட் தரையில் மோதி 15 சாப்ட்வேர் என்ஜினியர்கள் படுகாயம்

By Chakra
Google Oneindia Tamil News

SJR I Park
பெங்களூர்: பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள எஸ்ஜேஆர் ஐபார்க் கட்டடத்தில் லிப்ட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 9 மாடிகளை அதிவேகத்தில் கடந்து கீழ்த் தளத்தில் மோதியதில் அதிலிருந்த 15 சாப்ட்வேர் என்ஜினியர்கள் படுகாயமடைந்தனர். சிலருக்கு கால் எலும்புகள் முறிந்துள்ளன.

எஸ்ஜேஆர் ஐபார்க் கட்டடத்தில் 8 மாடிகளைக் கொண்ட 3 கட்டடங்கள் உள்ளன. இதில் வார்ப் டவர் என்ற கட்டடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது.

இந்தக் கட்டத்தில் யூனிசிஸ் இந்தியா மற்றும் பிடலிட்டி இன்பர்மேசன் சர்வீசஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள் உள்ளன.

இங்கு கோன் நிறுவனம் தான் லிப்டுகளை அமைத்துள்ளது. நேற்று இந்தக் கட்டடத்தின் 7வது மாடியில் உள்ள கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு 15 ஊழியர்கள் லிப்டில் ஏறி, தரைத்தளத்துக்கு வருவதற்காக பட்டனை அழுத்தினர்.

அப்போது திடீரென லிப்ட் கட்டுப்பாடு ஏதும் இல்லாமல் பயங்கரமான வேகத்தில் தரையை நோக்கிப் பாய்ந்தது. அதிலிருந்தவர்கள் அலறிய நிலையில், அந்த லிப்ட் தரைத்தளத்தையும் தாண்டி இரண்டாவது கீழ் தளத்தில் வந்து மோதி நின்றது.

அதிலிருந்த 15 பேரும் தூக்கி வீசப்பட்டதில் அனைவருமே காயமடைந்தனர். லிப்ட் தரையில் பயங்கரமாக மோதியதில் பெரும் தூசியும் கிளம்பியது. சிறிது நேரம் ஒன்றுமே புரியாத நிலையில், பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த மற்றவர்கள் தான் லிப்டைத் திறந்து இவர்களை மீட்டுள்ளனர்.

இவர்களை மீட்கவே 20 நிமிடங்கள் ஆகியுள்ளன. காயமடைந்தவர்கள் ஒயிட்பீல்டில் உள்ள வைதேகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சிலருக்கு கால் எலும்புகள் முறிந்துள்ளன. இதையடுத்து அவர்கள் இன்னும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேஷா சாய் என்பவருக்கு மிக பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு எச்ஏஎல் ஏர்போர்ட் சாலையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

English summary
Fifteen men, most of them employees of an IT major, were injured after a lift in a Whitefield tech park crashed through nine floors, including two of the basement, around 1.45pm on Tuesday. The supporting cable reportedly snapped, sending the Kone lift down, police said. The accident occurred at Warp Tower, one of the three eight-storey structures, at SJR iPark in Whitefield. The tower houses two companies — IT major Unisys India and financial services company Fidelity Information Services India — among others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X