For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாம்சங்கை வென்ற ஆப்பிள்... ரூ 5,500 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

Apple iPhone and Samsung
கலிபோர்னியா: காப்புரிமை தொடர்பான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ5,500 கோடி இழப்பீடு வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்களது ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் தயாரிப்புகளை சாம்சங் நிறுவனம் அப்படியே காப்பியடித்து சந்தைக்கு விடுகிறது என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புகார். இந்த விவகரத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் விசாரித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரும் சமாதானமாகப் போக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், காப்புரிமை விதிகளை மீறியதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ5,500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகத்தில் அதிக மதிப்பு கொண்டதாக ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்திருக்கும் சூழலில் இத்தீர்ப்பு அந்நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சாம்சங் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.

இதனிடையே கலிபோர்னியா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக சாம்சங் நிறுவனம் இன்று அறிவித்திருக்கிறது.

English summary
Apple Inc scored a sweeping legal victory over Samsung on Friday as a US jury found the Korean company had copied critical features of the hugely popular iPhone and iPad and awarded the US company $1.05 billion in damages.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X