Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

99.6% பேர் தோல்வி: ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை

Posted by:
Updated: Wednesday, August 29, 2012, 18:38 [IST]

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரு தேர்வில் 99.6 விழுக்காட்டினர் தோல்வி அடைந்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேர்வு எழுதியவர்களிடம் குறை இல்லை. தேர்வு முறையில் தான் குறை உள்ளது என்பதை உணர முடிகிறது. மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்பிக்கும் முறையை ஊக்குவிக்கும் வகையில் தான் தகுதித் தேர்வு முறை அமைந்துள்ளது. 99 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தோல்வி அடைந்துவிட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது, ஆண்டுக் கணக்காக படித்த பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு சிறப்பான கல்வியும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். நிகழ்கால சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வியியல் பட்ட, மற்றும் பட்டயப் படிப்புகளை மேம்படுத்த வேண்டும். ஒன்றுக்கும் உதவாத தகுதித் தேர்வை நடத்துவது திறமையை வளர்க்கவோ, அளவிடவோ உதவாது. எனவே, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படையில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு கட்டாயப்பயிற்சி அளித்து ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும். அப்போது தான் தரமான கல்வியை வழங்க முடியும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Story first published:  Wednesday, August 29, 2012, 16:26 [IST]
English summary
99.6% teachers failed in the recently held teachers eligibility test(TET). In the mean while, PMK founder Ramadoss wants the government to cancel TET.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter