Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தங்கச்சி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து புருஷன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

Posted by:
Published: Wednesday, August 29, 2012, 13:02 [IST]

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது கள்ளக்காதலன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து, கட்டிய கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர்.

குளித்தலை அருகே உள்ளது பாப்பாக்காப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். 45 வயதாகிறது. இவரது மனைவி கலையரசி. இவருக்கு இன்னொருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த உறவுக்கு கலையரசியின் தங்கையும் ஆதரவாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு ரங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கலையரசியின் தங்கை, கள்ளக்காதலன் ஆகியோருடன் கலையரசியும் சேர்ந்து தலையில் பெரிய கல்லைப் போட்டு கொலை செய்தனர்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ரங்கநாதன் உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய அவர்கள் கலையரசியைக் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரங்கநாதனுக்கும், அவரது மனைவி கலையரசிக்கும் 5 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Topics: murder
English summary
A 45 year old man was murdered by his wife, her paramour and wife's sister near Kulithalai. Police have arreted the person's wife.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST