For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கு நிறைய பாய் பிரண்ட்...ஷானாஸ்

Google Oneindia Tamil News

Shanaz
சென்னை: எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. ஆடம்பர வாழ்க்கைக்காக பலரிடமும் பழகி அவர்களிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றைப் பெற்றேன். ஆனால் நான் மனதார மணந்து கொண்டது நான்கு பேரை மட்டுமே என்று கூறியுள்ளார் கேரள இளம் பெண் ஷானாஸ்.

32 வயதான ஷானாஸ், 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து கொண்டு பெரும் மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானபோது அனைவரும் அதிர்ந்து போயினர்.

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டதாகவும், வாலிபர்களை மயக்கி திருமணம் செய்தது எப்படி? என்பது குறித்தும் கேரள அழகி சகானா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த பரபரப்புப் புகார்களைத் தொடர்ந்து தலைமறைவாகி விட்டார் ஷானாஸ். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். சில நாள் தலைமறைவுக்குப் பின்னர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே போலீஸாரிடம் சிக்கினார் ஷானாஸ்.

கைது செய்யப்பட்ட ஷானாஸை சென்னைக்குக் கொண்டு வந்த தனிப்படை போலீஸார் அவரை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது ஒரு வாக்குமூலத்தை அளித்துள்ளார் ஷானாஸ்.

அப்போது ஷானாஸ் கூறியதாவது...

கேரளமாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள புத்தன் வீடு எனது சொந்த ஊராகும். நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது தாயார் வீட்டை விட்டு சென்றுவிட்டார். எனது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார்.

முதலில் சித்திக்

நான் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, சித்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது, 10 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அதன்பிறகு, சித்திக்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்.

அதன்பிறகு கேரளாவில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்தேன். கடந்த 2005-ம் ஆண்டு இறுதியில், பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து, சென்னை வேப்பேரியில் உள்ள சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது, மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்தேன். பின்னர் வேலையில் இருந்தும் நின்று விட்டேன்.

2வது ஆர்ட் டைரக்டர் ராகுல்

2007-ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த சினிமா ஆர்ட் டைரக்டர் ராகுல் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை திருச்சி வேப்பூரில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். அவருடன் 6 மாத காலம் குடும்பம் நடத்தினேன். பின்னர் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மீண்டும் சென்னை வந்து பழைய சூப்பர் மார்க்கெட்டிலேயே வேலைக்கு சேர்ந்தேன். 2009-ம் ஆண்டு வரை அங்குதான் வேலை செய்தேன்.

அப்போது, கடை உரிமையாளர் சம்சுதீனிடம் வீடு வாங்குவதாக கூறி ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினேன். பின்னர், வேலையில் இருந்து நின்றுவிட்டேன்.

நிறைய ஆண்களுடன் தொடர்பு

அதன்பிறகு, வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதியில் சென்று தங்கினேன். அங்கு இருந்தபடி, தரமணியில் உள்ள கால்சென்டரில் வேலை பார்த்தேன். அப்போது, நிறைய ஆண்களிடம் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான், அடையாறு சரவணன், தியாகராயநகர் ராஜா, திருவொற்றியூர் சரவணன், போரூர் மணிகண்டன், புளியந்தோப்பு பிரசன்னா ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

3வது போரூர் மணிகண்டன்

எல்லோரிடமும் நான் வக்கீலாக இருப்பதாக கூறினேன். போரூரை சேர்ந்த மணிகண்டனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி திருமணம் செய்தேன். அவருடன் 2 மாதங்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு அவரையும் பிரிந்தேன்.

4வது புளியந்தோப்பு பிரசன்னா

அதன் பிறகு, புளியந்தோப்பு பிரசன்னாவுடன் பழகி திருமணம் செய்தேன். இந்த 4 பேரை மட்டும்தான் திருமணம் செய்தேன். மற்றவர்களின் நான் நட்பு ரீதியாகத்தான் பழகினேன்.

எனக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் உண்டு. ஆனால், நான் 50 திருமணம் செய்து கொண்டதாக கூறுவது சரியல்ல. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே நிறைய ஆண்களுடன் பழகினேன். அவர்களிடம் இருந்து பணம், நகைகளை பெற்றேன் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார் ஷானாஸ்.

ஷானாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சாஸ்திரி நகர் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் பல உண்மைகளை வரவழைக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இன்று கோர்ட்டில் இதுதொடர்பான மனுவை அவர்கள் தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.

English summary
Keralam woman, Shanaz, who was nabbed in Bangalore has revealed her frauds to the Chennai police in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X