For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிசர்வ் வங்கி பெயரில் பல கோடி மோசடி செய்த அப்ரோ யேசுதாஸை பிடிக்க பெங்களூரில் போலீஸ் முகாம்

By Mathi
Google Oneindia Tamil News

Aphro Yesudas
சென்னை: ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த பலே கில்லாடி அப்ரோ யேசுதாஸ் தற்போது பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.

யேசுதாஸ் நடத்தி வந்த அப்ரோ அறக்கட்டளை குறித்த எச்சரிக்கையை கடந்த ஜூலை மாதம் ரிசர்வ் வங்கி ஊடகங்களில் வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி அப்ரோ நிறுவனம் செயல்பட்வில்லை என்றும் பொதுமக்கள் ஏமாந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை போலீசாரே சுதாரித்துக் கொண்டு வழக்கு ப் பதிவு யேசுதாசின் கூட்டாளிகளை கைது செய்தனர். ஆனால் யேசுதாசும் அவரது எடுபிடியாக இருந்த தேவி என்ற பெண்ணும் தலைமறைவாகி ஓடிவிட்டனர்.

இதனிடையே சென்னை கொளத்தூரில் யேசுதாசுக்கு சொந்தமான 4 நிறுவனங்கள் குரோம் பேட்டை, திருவொற்றியூரில் உள்ள நிறுவனங்களுக்கும் சென்று போலீசார் விசாரித்தனர். அங்கு அவரைபற்றி தகவல் கிடைக்காததால் 6 நிறுவனங்களும் முடக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் லால்குடியில் இயங்கி வந்த அப்ரோ அறக்கட்டளை கிளை நிர்வாகி ரோஸ்மேரி தலைமையில் 50 பெண்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புதிய புகார் தெரிவித்தனர். அதில் ரூ.10 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு தன்னை லால்குடி பகுதி கிளை மேலாளராக யேசுதாஸ் நியமனம் செய்வதாகவும், 143 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் தருவதாக கூறி தலா ரூ.6 ஆயிரம் பணம் வசூலித்து விட்டு இப்போது ஏமாற்றுவதாகவும் கூறினர். மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சத்தை ஏமாற்றி விட்டனர் என்றும் யேசுதாஸ் மீது புகார் தெரிவித்திருந்தனர்.

யேசுதாஸ் மீதான புகார்கள் தொடர்வதால் அவனை பிடித்தாக வேண்டிய நிலையில் சென்னை போலீசார் இருக்கின்றனர். அவனுடன் அவனது கூட்டாளி தேவியும் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்..

English summary
The Chennai police team camp in Banglore for catch the Mecha Cheater Aphro Yesudas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X