For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதச் சம்பளம் கொடுக்க விரைவில் சட்டம்!

By Siva
Google Oneindia Tamil News

Salary
டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரை மட்டும் நடைமுறைக்கு வந்தால் வீட்டு வேலைகள் செய்வதற்காக இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதச் சம்பளம் தர வேண்டி இருக்கும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு புதிய மசோதாவை தயாரித்து வருகிறது. இந்த மசோதாப்படி வீட்டு வேலைகள் செய்யும் இல்லத்தரசிகளுக்கு கணவன்கள் மாதா மாதம் ஒரு தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டும். இந்த மசோதா விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட உள்ளது.

இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறுகையில்,

இந்த புதிய மசோதா பெண்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய சம்பளத் தொகையை அரசு நிர்ணயிக்கும். வரைவு மசோதா தயாரானதும், அதை இன்னும் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்றார்.

கணவன்கள் தங்கள் மனைவியின் பெயரில் வங்கிக் கணக்கை துவங்கி தங்கள் சம்பளத்தில் இருந்து 10 முதல் 20 சதவீதத்தை அதில் மாதாமாதம் செலுத்த வேண்டும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவி்த்தார்.

English summary
Women and Child Development ministry is preparing draft of a Bill according to which husbands have to pay monthly salary to housewives for doing household chores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X