For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை சிறையில் இந்திய மீனவர் எவரும் இல்லை: எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

SM Krishna
டெல்லி: இந்திய மீனவர் எவருமே இலங்கை சிறையில் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் கொடுத்திருந்த நோட்டீஸ் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து எஸ்.எம்.கிருஷ்ணா பேசியதாவது:

இலங்கையில் இந்திய மீனவர்கள் எவரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இல்லை. இருப்ப்னும் போதைப் பொருள் கடத்தியதாக சில இந்தியர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்படும் போது கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் உள்ள தூதருடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்து உதவி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் இருதரப்பு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

முன்னதாக இன்று காலையில் அவை கூடியதும் சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக விவாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அவைக்கு வராததால் விவாதம் நடைபெறவில்லை.

இதனால் எஸ்.எம். கிருஷ்ணா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அதிமுகவின் மைத்ரேயன் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
No Indian fisherman is in Sri Lankan custody and the government is engaged with the neighbouring nation to ensure that the fisherfolk carry on their livelihood safely, Parliament was informed today. "Presently, there are no Indian fishermen in Sri Lankan custody on fisheries related charges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X