Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

தீபாளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை: 15ம் தேதி முதல் துவக்கம்

Posted by:
Published: Saturday, September 8, 2012, 17:25 [IST]

 Diwali Special Discount Sale Co Optex

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ஆடைகள் சிறப்பு தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை வரும் 15ம் தேதி முதல் துவங்குகிறது.

தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் புதிய டிசைன் பட்டு மற்றும் பருத்தி புடவைகள், வேஷ்டிகள், துண்டு, கம்பளம் உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவு இருப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அங்கு கிடைக்கும் அனைத்து கைத்தறி ஆடைகளுக்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் புதிய புதிய வடிவமைப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தும் இந்நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக துணி வணிகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.

English summary
Co-optex has announced 30% discount sale ahead of Diwali. This sale will be there from spetember 15.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs