Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ரயில் முன் விழுந்து சாகப் பார்த்த குடிகார 'ஓனர்' - அடிபடாமல் காப்பாற்றி உயிர் நீத்த நாய்!

Posted by:
Published: Sunday, September 9, 2012, 12:13 [IST]

மாஸ்கோ: கஸகஸ்தானில் தனது எஜமான் குடிபோதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்யப் போவதைப் பார்த்து, அவர் வளர்த்து வந்த நாய், அந்த நபரை கஷ்டப்பட்டு வெளியே இழுத்துப் போட்டது. ஆனால் துரதிர்ஷ்டவமாக ரயிலில் அடிபட்டு அந்த நாய் செத்துப் போனது.

மனிதர்களை விட நாய்கள் பல விஷயங்களில் அதி புத்திசாலிகள். நமது மூளையை விட அவற்றின் மூளைக்கு நல்ல யோசனைத் திறனும், புத்திசாதுரியமும் நிறையவே உண்டு.

கஸகஸ்தானில் ஒரு நாய், தன்னை வளர்த்து வந்த எஜமானர், ரயிலில் அடிபடவிருந்ததைப் பார்த்து அவரைக் காப்பாற்றி விட்டு தான் ரயிலில் அடிபட்டு செத்துப் போன சோகம் நடந்துள்ளது.

கஸகஸ்தானின் கரகன்டா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வயிறு நிறைய வோட்கா குடித்து விட்டு ரயில் பாதையை நோக்கி நடந்தார். தண்டவாளத்தின் மீது நடந்தபோது போதை அதிகமாகி மயங்கி விழுந்தார். தற்கொலை செய்யும் நோக்குடன் அவர் போனதாக தெரிகிறது. அப்போது ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த அந்த நபர் வளர்த்து வந்த செல்ல நாய் வேகமாக ஓடி வந்தது. தனது எஜமானரை அவரது டிரஸ்ஸைப் பல்லால் கடித்து பலம் கொண்டு இழுத்தது. இதையடுத்து அந்த நபர் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து விழுந்தார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் ரயில் படு வேகமாக நாய் மேல் ஏறிப் போய் விட்டது. இதில் நாய் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து போனது.

இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

English summary
A dog was run over by a train moments after it managed to pull its drunken suicidal owner off railway tracks in a Kazakh city. According to the Info-Tses news portal, the incident took place in Karaganda city. The 48-year-old owner, who later said he wanted to commit suicide, drank a bottle of vodka and fell asleep on railway tracks. Upon seeing the train, the dog started pulling its owner away. When the train drivers saw the dog on the rail tracks, they used the emergency brake, said an investigator with the local transport police department.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter