Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மிகப் பெரும் பொருளாதார சீர்திருத்தம் செய்துவிட்டார் மன்மோகன்: அமெரிக்க ஏடுகள்

Posted by:
Published: Saturday, September 15, 2012, 17:36 [IST]

 Us Media Hails On Fdi Liberalisation Biggest Economic

நியூயார்க்: எந்த அமெரிக்க ஏடுகள் மெளனியான பிரதமர், ஊழல் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடியவர், செயல்படாத பிரதமர் என்றெல்லாம் வர்ணித்தவோ அதே பத்திரிகைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விருப்பப்படியான அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என்று மன்மோகன்சிங் அறிவித்தவுடன் தலையில் தூக்கி வைத்து கூத்தாட்கின்றன.

அன்னிய முதலீட்டை இந்தியா அனுமதி அளித்திருப்பது மிகப்பெரிய பொருளாதார சீர் திருத்தம் என்று அமெரிக்க பத்திரிகைகள் சொல்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலானது இந்த பொருளாதார சீர்திருத்தம் என்கின்றன.

பொருளாதார பின்னடைவை சரிசெய்து, வேலைவாய்ப்பையும், நாட்டின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டிய நிலையில் இந்த நடவடிக்கையை எடுத்தாகும் நெருக்கடியில் இருக்கிறது என The New York Times சொல்கிறது. பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்துவதன் மூலம் அரசியல் சவாலையும், கூட்டணி கட்சிகள் முறியும் அபாயத்தையும் காங்கிர அரசு எதிர்கொள்கிறது என்றும் அந்த ஏடு கூறுகிறது.

மெளன பிரதமர் என்று மன்மோகன்சிங்கை சாடிய The Washington Post தற்போது, வளர்ச்சியற்ற பொருளாதாரம், பணவீக்கம், ஊழல் முறைகேடு ஆகியவற்றால் இந்த கடின முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் தள்ளப்பட்டிருப்பதாக சொல்கிறது.

English summary
Leading US dailies have described India's decision to allow FDI in multi-brand retail and aviation as "biggest economic reforms" in two decades, while apprehending these proposals pose a "big political risk" for the Prime Minister Manmohan Singh-led UPA government.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter