For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் வர முயன்ற அச்சுதானந்தன் எல்லையில் தடுத்து நிறுத்தம்

By Mathi
Google Oneindia Tamil News

V S Achuthanandan
களியக்காவிளை: கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழகத்தின் கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் மட்டும் நிகழ்ந்து வந்தது. கடந்த 10-ந் தேதி போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் எழுச்சி கொள்ள வைத்திருக்கிறது. எப்போதும் பகையாய் இருக்கும் கேரள மாநிலத்தவர் கூட கூடங்குளம் நோக்கி ஆதரவு பேரணி நடத்தி கைதாகியிருந்தனர்.

இந்த நிலையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம் இதற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை. கட்சி மேலிடத்தை மீறி அச்சுதானந்தன் இன்று கூடங்குளம் வருவதாக அறிவித்திருந்தார். திட்டமிட்டபடி கூடங்குளம் நோக்கி வந்த அச்சுதானந்தன், தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Differing from party's official line opposing scrapping of the Kudankulam Nuclear Power Plant, party veteran and former chief minister V S Achuthanandan is visiting the coastal town in neighbouring Tamil Nadu today to express solidarity with the protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X