For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்வீடனில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம்: வெளிநாட்டவர்களும் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

Protest in Sweden supporting Kudankulam protesters
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக கடந்த 18ம் தேதி அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 18ம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் கூடங்குளம் அணு உலை போராட்டத்திற்கு ஆதரவாக அமைதி போராட்டம் நடந்தது.

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் இரவு 7 மணி வரை நடந்தது. ஸ்வீடன் கிரீன் ஹவுஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கூடங்குளம் அணு மின் உலையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய வாசகங்கள், அணு உலை எதிர்பாளர்கள் மீதான அரசின் அடக்குமுறைகளை காட்டும் படங்கள் அடங்கிய போர்டுகளை ஏந்தியபடி நின்றார்கள்.

வேற்று இன மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமும், கலந்துரையாடியும் தமது போராட்டத்தின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார்கள்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உலகளாவிய ரீதியில் விரிவடைகிறது என்பதையே இப்போராட்டம் உணர்த்துகிறது.

English summary
Peaceful protest was held in Sweden capital Stockholm against Kudankulam nuclear power plant on september 18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X