For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்சார வாரியத் தலைவராக ஞானதேசிகன் - மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்களை அங்கிங்கெனாதபடி வாட்டி வதைத்து வரும் மின்வெட்டுக்கு காரணமாக தமிழக மின்சார வாரியத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு ஞானதேசிகன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வரலாறு காணாத மின்வெட்டை தமிழகம் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறது. தொழில்நகரமான கோவையில் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு மின்சாரவாரியத் தலைவரை மாற்றியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் கே.ஞானதேசிகன் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத் தலைவராகவும் பணியாற்றுவார். தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் கூறப்பட்டுள்ளது.

English summary
The State government on Friday announced the transfer of Rajeev Ranjan, Chairman and Managing Director of TNEB Limited and Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) and Chairman of the Transmission Corporation (Transco), a day after thousands of micro and small units in Coimbatore downed their shutters protesting long hours of load shedding.K. Gnanadesikan, an officer of the Indian Administrative Service (IAS) belonging to the 1982 batch, has been named Mr. Ranjan's successor. At present, he is holding the post of Principal Secretary (Revenue).
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X