For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை இருண்ட நாடாக மாற்றிவிட்டார் ஜெயலலிதா: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மின்சாரத்தைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாட்டை இருண்ட நாடாக மாற்றியிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி கூறுகையில், தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசிடமிருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான வழிவகைகளை திமுக ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இப்போது ஜெயலலிதா ஆட்சியில்தான் இருக்கிறார். அவர் முதலில் அக்கறை காட்டட்டும்.

3 மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார். இப்போது எத்தனை மாதங்கள் ஆகிறது. 2 மணிநேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 14 மணி நேரமாக உள்ளது. மின் வழி தடம் இல்லாதது எல்லாம் பிரச்னை இல்லை. அதிமுக ஆட்சியில் இருப்பதுதான் பிரச்னை. மத்திய அரசு மீதும், திமுக மீதும் குறை கூறி தப்பிக்கப் பார்க்கிறார்.

மின் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை என்றார் அவர்.

English summary
Lambasting Chief Minister Jayalalithaa for faulting the Congress-led UPA and DMK for power crisis in Tamil Nadu, party chief M Karunanidhi said the AIADMK chief has no right to talk about it as her party led government "has left Tamil Nadu in darkness. Jayalalithaa, whose government has left Tamil Nadu in darkness has no right to talk about the power situation. It is due to 15 hours power cut that she was forced to make a public address on the issue.",,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X