For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பிட்டு சாப்பிட்டே உயிரைவிட்ட 283 கிலோ குண்டுப் பெண்

By Siva
Google Oneindia Tamil News

Fat Women
மயாமி: அமெரிக்காவில் சாப்பிட்டு சாப்பிட்டே ஓவர் குண்டாகி இறந்த பெண் குறித்து ஆவணப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மயாமியைச் சேர்ந்தவர் டாமினிக் லனாய்ஸ்(40). அவர் கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஏன் படுக்கையை விட்டுக் கூட எழுந்திரிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது எடை 283 கிலோ ஆகும்.

டாமினிக் முதலில் ஸ்லிம்மாகத் தான் இருந்துள்ளார். ஆனால் 16 வயதில் தாயான அவர் என்று குழந்தையை பெற்றெடுத்தாரோ அதில் இருந்து அவரது உடல் எடை அதிகரி்த்துவிட்டதாம். அவரது எடை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே போனதையடுத்து அவர் எப்பொழுது பார்த்தாலும் படுக்கையில் போர்வையை போர்த்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிவிட்டது. அவரது உடல் வாகிற்கு ஏற்ற உடைகளே கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு குண்டாகிவிட்டார்.

இப்படி படுக்கையிலேயே இருந்த டாமினிக்கை அவரது குழந்தைகள் தான் கவனித்துக் கொண்டனர். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றுப் பகுதியை பெருமளவு குறைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் கடந்த மார்ச் மாதம் இறந்தவிட்டார். இந்நிலையில் அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் ஒன்றை தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.

இவ்வளவு குண்டான ஒருவர் இருக்கிறார் என்பதே கடந்த 2010ம் ஆண்டு தான் ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது. ஹைத்தியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது வேறு இடத்திற்கு செல்ல விரும்பிய அவரை ஓவர் குண்டாக இருப்பதாகக் கூறி விமான நிறுவனங்கள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்தபோது தான் டாமினிக் பற்றி ஊடகங்கள் அறிந்து கொண்டன. பின்னர் அவர் அமெரிக்க ராணுவத்தின் சரக்கு விமானத்தின் மூலம் தான் அமெரிக்கா சென்றார்.

மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி லனாய்ஸ் தன் இஷ்டப்படி எக்கச்சக்கமாக சாப்பிடத்தால் தான் பலியானார்.

English summary
Dominique Lanoise, 40, from Miami weighes 625lb and she was housebound for almost two decades before dying in march. Her daughters took care of her all these years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X