For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்... ஆசிரியர்களுக்கு ஜெ. அறிவுரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மாணவ‌- மாண‌விய‌ர்க‌ள் இடையே த‌ன்ன‌ம்‌பி‌‌க்கையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம். சவால்களை சமாளிக்கும் ‌திறமையை மாணவ‌ர்க‌‌ள் இட‌த்‌திலே உருவா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆ‌சி‌‌ரிய‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அ‌றிவுரை கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களு‌க்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெ‌ற்றது.

இ‌ந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி எ‌ன்பது அற‌ப்ப‌ணி, த‌ன்னலம‌‌‌ற்ற ப‌ணி, சீ‌ரிய ப‌ணி. ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி எ‌ன்பது வெறு‌ம் க‌ல்‌வியை ம‌ட்டு‌ம் போ‌தி‌ப்பது ம‌ட்டும‌ல்ல, ஒழு‌க்க‌த்தை, ப‌ண்பை, பொது அ‌றிவை, ஆ‌ன்‌மீக‌த்தை மாணவ - மாண‌விய‌ர் இடையே எ‌டு‌த்து‌ச் செ‌ல்லு‌ம் ப‌ணி.

வரு‌ங்கால ச‌‌ந்த‌தி‌யினரு‌க்கு வ‌ழிகா‌ட்டு‌ம் ப‌ணியை ‌நீ‌ங்க‌ள் மே‌ற்கொ‌ள்ள இரு‌க்‌‌கி‌றீ‌ர்க‌ள். கரையா க‌ல்‌வி‌‌ச் செ‌ல்வ‌‌த்தை க‌ற்று‌க் கொடு‌க்க இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள். எ‌ந்த ஒரு தொ‌‌ழி‌லிலும் த‌ன்‌னிட‌‌ம் வேலை செ‌ய்பவ‌ர் த‌ன்னை‌விட வள‌ர்‌ச்‌சி பெறுவதை எ‌ந்த முதலா‌ளியு‌ம் ‌விரு‌ம்ப மா‌ட்டா‌ர்.

ஆன‌ா‌ல் த‌ன்‌னிட‌ம் ப‌யிலு‌ம் மாணவ‌ர் புக‌ழ் பெறுவதை ஆ‌சி‌ரிய‌ர் பெரும‌க்க‌ள் க‌ண்டு இ‌ன்புறுவ‌ர். அ‌ப்படி‌‌ப்ப‌ட்ட உ‌‌ன்னதமாக ப‌ணி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி. மாணவ‌ர்க‌ளி‌ன் ஆ‌ற்ற‌ல்களை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ப‌ணி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி. மாணவ‌ர்க‌ளி‌ன் ஆ‌ர்வ‌த்தை ஊ‌க்க‌ப்படு‌‌த்து‌ம் ப‌ணி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட பொறு‌ப்பு‌ள்ள ப‌ணியை ‌நீ‌ங்களெ‌ல்லா‌ம் ‌திற‌ம்பட செய‌ல்ப‌ட்ட வே‌ண்டு‌ம். எ‌ந்த சா‌வ‌ல்களையு‌ம் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌திறமையை மாணவ‌ர்க‌‌ள் இட‌த்‌திலே உருவா‌க்க வே‌ண்டு‌ம். மாணவ‌- மாண‌விய‌ர் இடையே த‌ன்ன‌ம்‌பி‌‌க்கையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதா அ‌றிவுரை கூ‌றினா‌ர்.

முன்னதாக அவர், 92 லட்சம் மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை, வண்ணசீருடை மற்றும் கிரையான்கள், பென்சில், கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணி, இலவச சைக்கிள், பஸ்பாஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும், குடும்பத்தில் தலைவரை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

English summary
Chief Minister Jayalalitha has advised the teachers to imbibe confidence into students while teaching them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X